சினிமா மோகத்தால் சீரழியும் பெண்கள்.... எங்கே செல்லும் இந்த பாதை! | குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் |
விஜய் நடித்திருக்கும் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரப்போகிறது. இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், நான்காவது பாடல் இன்று(ஆக., 31) வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல்களை விஜய் பாடியுள்ள நிலையில், ஒரு பாடலை மறைந்த பாடகி பவதாரணி உடன் இணைந்து பாடியிருந்தார். பவதாரணிக்காக ஏஐ தொழில் நுட்பம் பயன்படுத்தபட்டது. மேலும், முதல் மூன்று பாடல்களும் பெரிதாக ஹிட் அடிக்காத நிலையில், இன்று வெளியாகும் நான்காவது பாடலாவது ஹிட் அடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் இந்த கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்தின் கதையை விஜய் இடத்தில் சொன்ன போது இசை அமைப்பாளர் குறித்து நான் எதுவும் பேசவில்லை. பின்னர் விஜய்தான், வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா காம்பினேஷன் சிறப்பாக இருக்குமே என்று சொல்லி யுவன் சங்கரை இசையமைப்பாளராக புக் பண்ணுமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்.