குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
மலையாள திரையுலகில் சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது நடிகைகள் சிலர் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதில் பிரபல இயக்குனர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா முதல் குற்றச்சாட்டை கூறி அதிர வைத்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் தான் பொறுப்பு வைத்து வந்த கேரள திரைப்பட அகாடமி சேர்மன் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் அதிர்ச்சிகரமாக நடிகர் ஒருவர் இயக்குனர் ரஞ்சித் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று கூறி கேரளா டிஜிபி இடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரில் அந்த நடிகர் கூறியுள்ளதாவது : “இயக்குனர் ரஞ்சித் என்னை ஆடிசன் செய்ய வேண்டும் என்பதற்காக தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரச் சொன்னார். ஆடிசன் என்கிற பெயரில் எனது ஆடைகளை களையச் செய்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இதை நான் ஆடிசனின் ஒரு பகுதி என்றுதான் நான் நம்பினேன். அந்த சமயத்தில் நடிகை ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்ட அவர் அதன் பிறகு அந்த புகைப்படங்களை அந்த நடிகைக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு தான் அந்த நடிகை ரேவதி என்றும், தான் அனுப்பி வைத்த என்னுடைய புகைப்படங்களை அவரும் ரசித்தார் என்றும் என்னிடம் கூறினார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். மறுநாள் காலை இதற்காக எனக்கு கணிசமான தொகையும் கொடுத்தார் ரஞ்சித். இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் நான் இருந்தேன். தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து ரஞ்சித்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்க முன்வந்தேன்” என்று கூறியுள்ளார்.