கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் |

பத்திரிகையாளராக இருந்து நடிகை ஆனவர் ரினி ஆன் ஜார்ஜ். '916 குஞ்சூட்டன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பர படங்கள் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ரினி மலையாள அரசியலின் இளம் அரசியல்வாதியும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ராகுல் மம்கூத்ததில் மீது மறைமுகமாக பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
நேற்று நிருபர்களிடம் பேசிய அவர் ராகுலின் பெயரை குறிப்பிடாமல் கூறியதாவது: ஒரு கட்சியின் இளம் தலைவர் சமூக வலைத்தளம் மூலம் என்னுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தி கொண்டார். என்னை நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் தொடர்ந்து ஆபாச படங்கள், ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். இதை கண்டித்ததுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினேன். அதன் பின்னர் சில நாட்கள் தனது செயல்பாடுகளை நிறுத்தினார்.
பின்னர் அவர் மீண்டும் ஆபாச படங்கள், குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். அவரது மோசமான நடவடிக்கை குறித்து அந்த கட்சியின் தலைவரிடம் தெரிவித்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கட்சியின் இளம் தலைவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களை எனக்கு தெரியும். அவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், நடந்தது குறித்து வெளியே சொல்ல முன்வர வேண்டும். அவரது பெயரை வெளியிடாததற்கு காரணம், அந்த கட்சியில் உள்ள பல தலைவர்களுடன் எனக்கு நல்ல உறவு உள்ளதால், அதை சீர்குலைக்க நான் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மற்றொரு நடிகை தனது பெயரை குறிப்பிடாமல் ராகுலின் பெயரை குறிப்பிட்டு பாலியல் புகார் கூறியுள்ளார். இதை தொடர்ந்து கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் அந்த பதவியை ராஜினாமா செய்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.




