கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி வெளியானது | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் | 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' | பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள் | ‛ஜனநாயகன்' ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட் | மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர | ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு | சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி |

'பிரேமம்' படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து மலையாளம், தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் “கொடி, தள்ளிப் போகாதே, சைரன்” ஆகிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இன்னும் ஒரு வெற்றிப் படத்தில் கூட தமிழில் நடிக்கவில்லை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் ஜோடியாக 'பைசன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்த மற்றொரு தமிழ்ப் படமான 'லாக்டவுன்' படத்தின் டீசர் இன்று காலையில் வெளியானது. இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்த நாளிலிருந்து இதுவரை இப்படம் பற்றி தன் சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவிடாமல் இருக்கிறார் அனுபமா.
இத்தனைக்கும் இந்தப் படத்தில் அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ளார். தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தைப் பற்றிக் கூட அவர் எதுவும் பதிவிடாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் படத்தின் பதிவுகளை அவர் எதற்காகப் புறக்கணிக்கிறார் என்பது தெரியவில்லை.




