டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞராக இருப்பவர் ரவீணா ரவி. ‛ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் விதார்த்தின் ஜோடியாக நடித்ததன் மூலம் நடிகையாகவும் என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து ‛லவ் டுடே' மற்றும் ‛மாமன்னன்' ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார் ரவீணா ரவி. இந்தநிலையில் மலையாள இயக்குனர் ஜோ ஜார்ஜ் என்பவர் தான் இயக்கியுள்ள ‛ஆசாதி' என்கிற திரைப்படத்தில் ரவீணா ரவிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார். பிரபல நடிகை வாணி விஸ்வநாத் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ரவீணா ரவி, வாய் பேச முடியாத ஒரு சிறை கைதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இது பற்றி ரவீணா ரவி கூறும்போது, “மாமன்னன், லவ் டுடே படங்களை பார்த்து விட்டு தான் இயக்குனர் ஜோ ஜார்ஜ் என்னை இந்த படத்தில் நடிக்க அழைத்தார். இந்த படத்தில் முதலில் என்னுடைய கதாபாத்திரம் பேசும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் என் கதாபாத்திரத்தின் மீது இரக்கம் வரவேண்டும் என்பதற்காக வாய் பேசாத மற்றும் ஒரு கர்ப்பிணி கதாபாத்திரமாக அது மாற்றப்பட்டு விட்டது.
வாணி விஸ்வநாத் போன்ற சீனியர் நடிகருடன் அதிக காட்சிகளில் நடிக்க வேண்டுமே, என்ன செய்யப் போகிறேன் என நினைத்த சமயத்தில் தான் இயக்குனர் இப்படி என்னை பேசாமலேயே நடிக்க வைத்ததால், அப்பாடா தப்பித்தேன் என்கிற உணர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார் ரவீணா ரவி. எல்லோருக்காகவும் தொடர்ந்து கணீரென டப்பிங் குரல் கொடுத்து வரும் ரவீணா ரவிக்கு வாய் பேசாத கதாபாத்திரம் என்பது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.