டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‛மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானவர் தான் லிஜோ மோல் ஜோஸ். அதன் பிறகு தமிழில் ‛ஜெய்பீம்' படத்தில் நடித்ததன் மூலம் ஓரளவு பிரபலமான நடிகையாக மாறி தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவரது திருமணமும் நடைபெற்றது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தாயின் இரண்டாவது திருமணம் தனது வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார் லிஜோ மோல் ஜோஸ்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் ஒன்றரை வயதாக இருக்கும் போதே என்னுடைய தந்தை இறந்துவிட்டார். அப்போது என் தாய் மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். எனக்கு சிறுவயதில் தந்தை என்று கூப்பிடுவதற்கு யாருமே இல்லாத சூழல் ஏற்பட்டு விட்டது. எனக்கு பத்து வயதாகும் போது என்னுடைய தாய் ஒருவரை அழைத்து வந்து இனி இவர்தான் உன் தந்தை என்று கூறினார். ஆனால் என் மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கனவே எனக்கும் என் அம்மாவுக்கும் சிறிய இடைவெளி இருந்தது. வளர்ப்பு தந்தை வந்த பிறகு அது கொஞ்சம் அதிகமாகி விட்டது. நான் என் சித்தியுடன் அதிக நேரங்களை செலவிட்டேன். ஒரு கட்டத்தில் சித்தியையும் பிரிந்து தனி வீட்டிற்கு செல்ல நேர்ந்தது.
அம்மாவிடம் எதையும் மனம் விட்டு பேச முடியவில்லை. காரணம் அம்மாவிடம் எது சொன்னாலும் அது வளர்ப்பு தந்தைக்கு தெரிந்து விடும் என நினைத்தேன். அம்மா என் மீது பாசம் காட்டினாலும் அது முழுமையாக இல்லை என்பது போல உணர்ந்தேன். ஆனால் கல்லூரி படிப்பை முடித்தபோது தான், அம்மா எதற்காக இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என்பதற்கான அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களுக்காக அவர்கள் இருவரும் குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கொண்டதும் அம்மா மற்றும் வளர்ப்பு தந்தை மீதான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது” என்று கூறியுள்ளார்.