Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்ணப்பாவுக்கும் கை கொடுக்கும் ஜெயிலர் கூட்டணி

24 நவ, 2023 - 03:37 IST
எழுத்தின் அளவு:
The-Jailer-Alliance-also-gives-a-helping-hand-to-Kannappa

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும் நடிகர் ரஜினிகாந்தின் நண்பருமான மோகன்பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு தற்போது கண்ணப்பா என்கிற படத்தை தயாரித்து, ஹீரோவாக நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல இன்னும் மற்ற திரையுலகங்களை சேர்ந்த முன்னணி நடிகர்களும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் மலையாளத்திலிருந்து மோகன்லாலும், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் நட்பு ரீதியாக சில நிமிடமே வந்து போகும் காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றனர். படத்தின் வெற்றிக்கும் அது பக்கபலமாக அமைந்தது. அதே பாணியில் கண்ணப்பா திரைப்படத்தின் வெற்றிக்கும் இந்த கூட்டணி உதவும் என எதிர்பார்க்கலாம்.

பாலிவுட் நடிகை கங்கனாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆரம்ப காலத்தில் பெரிய நடிகர்களின் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன் : ஜோதிகா ஓபன் டாக்ஆரம்ப காலத்தில் பெரிய நடிகர்களின் ... நான் பாலியல் தொந்தரவு கொடுத்தால் எதற்காக எனக்கு நன்றி சொல்கிறார்கள்? சீனு ராமசாமி நான் பாலியல் தொந்தரவு கொடுத்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in