ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி தினமான இன்று (நவ.,12) வெளியானது. டீசரில், விக்ராந்த், விஷ்ணு விஷால் தலைமையிலான இரு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுத்து பெரும் கலவரம் வெடிப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலவரத்தால் சில மரணங்களும் நிகழ்கின்றன. மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரஜினி, “விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க”, “குழந்தைகள் மனசுல கூட விஷத்தை விதைச்சுருக்கீங்க” எனப் பேசும் வசனங்களும் டீசரில் இடம்பெற்றுள்ளது. இந்த டீசர் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படம் குறித்து நடிகர் ரஜினி ‛எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட வீடியோவில், ‛அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வரும் பொங்கல் அன்று லால் சலாம் படத்தில் உங்களை சந்திக்கிறேன். மொய்தீன் பாய்..' என அவர் பேசியுள்ளார்.