Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச்சையில் சிக்கிய ஹனிரோஸ் படம்

17 ஜூலை, 2023 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Rachel-look-:-Oppose-for-Honey-rose-movie

முன்னணி மலையாள நடிகை ஹனிரோஸ். தமிழில் முதல் கனவே என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு சிங்கம்புலி, மல்லுகட்டு, காத்தவராயன், பட்டாம்பூச்சி படங்களில் நடித்தார். கடைசியாக ஆதியுடன் அவர் நடித்த 'சரித்திரம்' படம் வெளிவரவில்லை. சமீபகாலமாக தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சோலோ ஹீரோயினாக நடித்து வரும் படம் ரேச்சல். இந்த படத்தை ஆனந்தி பாலா இயக்குகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த போஸ்டரில் மாட்டுக்கறியை ரத்தம் சொட்டச் சொட்ட, ஹனிரோஸ் வெட்டும் காட்சி இருக்கின்றன. இந்த பர்ஸ்ட் லுக் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பான் இந்தியா படமாக உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியா முழுக்க பசு பாதுகாப்பு தீவிரமாகி வருகிறது. மாட்டு இறைச்சிக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாட்டுக்கறி வெட்டுவது போன்ற காட்சியை வைத்து சம்பந்தப்பட்டவர்களின் மனதை புண்படுத்தலாமா என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில பாரதிய ஜனதா நேரடியாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'ஜவான்' : ஆக்ஷன் ஹீரோயினாக நயன்தாரா'ஜவான்' : ஆக்ஷன் ஹீரோயினாக நயன்தாரா குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் : புதியவர்கள் உருவாக்கும் படம் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

18 ஜூலை, 2023 - 06:34 Report Abuse
V.Saminathan. இது அங்கமாலி பெரும்பாவூர் கோட்டயம் சைரோ மலபார் கோஷ்டியின் வேலை-தவிர மலையாளிகளுக்கு படிப்படியாக மழைவளம் குறைந்து சோற்றுக்கை பிச்சையெடுக்கும் நிலை வரும்போதே மாட்டின் மகிமை புரியும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in