நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரித்திருக்கும் படம் 'குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்'. இதில் ஸ்ரீதர், சிரஞ்சீவி, முருகன், ஜீவி, ரேஷ்மா, கேப்டன் கணேஷ், சரவணன், பஜார் பாபு, ரவி, கிருபா, சவுந்தர், விருமாண்டி, விக்னேஷ், ஏ.சோணை, சரண்யா, மெர்க்குரி சத்யா நடித்துள்ளனர். கிருஷ்டி இசையமைக்க, எம்.ஆர்.எம் ஜெய்சுரேஷ் - மோகன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.
ஏ.சோணை இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது : நாகரீக உலகில் நகரங்கள் பரபரப்பாக இயங்கினாலும் பல கிராமங்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது. அதிலும் மலை கிராமத்து மக்களின் நிலைமை மிகவும் பின்தங்கியேதான் உள்ளது. அப்படிபட்ட மலைகிராமத்து இளைஞர்கள் நால்வர் வேலை தேடி அருகில் உள்ள மதுரை மாநகருக்கு வருகின்றனர்.
ஒரு இடத்தில் தங்கி வேலை செய்துவரும் இவர்களிடம் சிலர் வம்பு இழுத்து தொல்லை கொடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த நால்வரிடமும் ஒரு கைத்துப்பாக்கி கிடைக்கிறது. அதனால் ஒரு விபரீதம் ஆகி நால்வரும் போலீசில் மாட்டுகின்றனர். அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகின்றனர் என்பதை திரில்லுடன் நகைச்சுவையையும் கலந்து இயக்கி இருக்கிறேன் என்கிறார் இயக்குனர் ஏ.சோனை.