Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நிலா டூ நந்தினி' - சாரா மகிழ்ச்சி

02 மே, 2023 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Nila-to-Nandini-:-Sara-happy

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்க 2011ல் வெளிவந்த படம் 'தெய்வத் திருமகள்'. அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். தொடர்ந்து தமிழில் “சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி” உள்ளிட்ட படங்களிலும், சில ஹிந்திப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் டீன் ஏஜ் பருவ கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன்தான் நடித்துள்ளார். முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தவர், இரண்டாம் பாகத்தின் டைட்டில் காட்சிகளிலும், அதற்குப் பிறகான சில காட்சிகளிலும் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இளம் பெண்ணாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

அவரது கதாபாத்திரத்தையும், நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் டுவிட்டரில், விக்ரமுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “நிலா டூ நந்தினி, தெய்வத் திருமகள், பொன்னியின் செல்வன் 2, சீயான் சார்,” என ஹாட்டின் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார். அதை ரிடுவிட் செய்து விக்ரம், “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்,” எனப் பாராட்டியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன் 2 - 100 கோடி, 200 கோடி…அப்ப 500 கோடி உறுதி ?பொன்னியின் செல்வன் 2 - 100 கோடி, 200 ... இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் மறைவு இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சசிக்குமார் திருப்பூர் அதாவது விக்ரமின் மகளாக நடித்து இப்போது ஜோடியாக
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
03 மே, 2023 - 06:52Report Abuse
vadiveluஎன்ன தப்பு?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in