நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் ‛வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் அவரது நடிப்பிற்காக பேசப்பட்டாலும் வெற்றி படங்களாக அமையவில்லை. இந்த நிலையில் ‛சித்தா' பட இயக்குனர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‛வீர தீர சூரன்' திரைப்படம் வெளியான நாளில் இருந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியான அன்று காலை முதல் சில பிரச்னைகளை சந்தித்து தாமதமாகவே வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரவு நேர காட்சியை ரசிகர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்த பிரபலங்களுடன் சேர்ந்து பார்த்து ரசிப்பதற்காக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றிற்கு விக்ரம் வந்திருந்தார். படம் முடிந்து அவர் கிளம்பும்போது ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளித்து அவரால் தனது கார் இருந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. இதனை தொடர்ந்து அவரின் உதவியாளர்கள் ஆட்டோ ஒன்றை வரவழைத்து அதில் விக்ரமை ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். விக்ரமுக்கும் நிச்சயம் இது புதிய அனுபவமாக இருந்திருக்கும்.