ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

மலையாள நடிகை மஞ்சு வாரியர் சமீப காலமாக மலையாளத்தையும் தாண்டி தமிழில் முக்கியமான இயக்குனர்களின் படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் மூலம் இன்னும் அதிக ரசிகர்களை சம்பாதித்து உள்ள இவருக்கு ரசிகர் வட்டம் கூடிக்கொண்டே தான் வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‛எம்புரான்' படத்தில் மஞ்சுவாரியரும் நடித்துள்ளார். இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஒரு பகுதியாக சில சேனல்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார் மஞ்சு வாரியர். அப்போது அவரிடம் உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த புகழ் உங்களை மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கிறதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியர் கூறும்போது, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என என்னால் சொல்ல முடியும். அதுதான் நான்.. குறிப்பாக கேரளாவில் யார் ஒருவருக்கும் நான் அந்நியமானவள் அல்ல. எந்த நேரத்திலும் அது இரவோ பகலோ எந்த வீட்டுக் கதவையும் என்னால் தட்டி ஒரு கிளாஸ் தண்ணி கொடுங்கள் என வாங்கி குடிக்க முடியும். அவர்களும் ஏனென்று கேள்வி கேட்காமல் எனக்கு கொடுப்பார்கள். இவள் வந்து எதற்காக நம்மிடம் கேட்கிறாள் என அவர்கள் சந்தேகம் கூட பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.