டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் சம்யுக்தா. சமீபத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் சம்யுக்தா இணைந்து நடித்த படம் விருபாக்சா. தெலுங்கில் இப்பபடம் நல்ல வரவேற்பைப் பெற்றது .இதைதொடர்ந்து இப்படம் தமிழில் வரும் மே 5 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சம்யுக்தா பேசியது; "இனிவரும் காலங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்ற கேள்வியே வராத வகையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். இங்கு நிறைய திறமையான நடிகைகள் உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் வர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் கேட்டுகொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.




