கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் |
நடிகை, பின்னணி பாடகி என இரண்டு பாதைகளில் பயணித்து வரும் ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் மகளிர் தினம் என்பதால் நேற்று தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார் ஆண்ட்ரியா. அந்த பதிவில், பெண்ணாக இருப்பதற்கு என்றென்றும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு அருகே உடை அணியாமல் ஒரு போர்வையால் உடம்பை போர்த்திக் கொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், நல்லதொரு உடை அணிந்து கொண்டு நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இப்படி ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கலாமே என்று ஆண்ட்ரியாவை விமர்சனம் செய்தனர். பலரும் அவரின் தனிப்பட்ட உரிமை என ஆதரவும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.