‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், டைரக்ஷன் பக்கம் தனது கவனத்தை திருப்பி தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தையும் இயக்கினார்.
இந்தநிலையில் மிகப்பெரிய இடைவெளி விட்டு தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, தனது மகளுக்காக இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்ற நிலையில் ஹோலி பண்டிகை அன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள அனந்தபுரதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா.
முதல் நாள் படப்பிடிப்பிலேயே தொடர்ந்து 16 மணி நேரம் இடைவிடாமல் காட்சிகளை படமாக்கியதாக சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ள ஐஸ்வர்யா, படப்பிடிப்பில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், “எனது தந்தைக்கு, தாத்தா இயக்குனர் கே.பாலசந்தர் முதன்முதலில் ரஜினிகாந்த் என பெயர் சூட்டியது இந்த ஹோலி பண்டிகை தினத்தில் தான்.. அதனால் என்னுடைய படத்தை துவங்குவதற்கு இதைவிட வேறு நல்ல நாள் என்ன இருக்கிறது” என்று தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.