பாயல்ராஜ் புத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் | சூரியின் மாற்றம் பிரமிக்க வைக்கிறது : விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் புகழாரம் | தனியார் தீவிற்கு ஹனிமூன் சென்ற ரகுல் ப்ரீத் சிங் | சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட அல்லு அர்ஜுன் | விஜய் சேதுபதி - ராம் கோபால் வர்மா சந்திப்பு | 'தேவர் மகன்' - ரீ-ரிலீஸ் செய்ய திட்டம்? | விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் |
வெங்கட் பிரபு தற்போது தெலுங்கில் முதன்முறையாக அடி எடுத்து வைத்து இளம் நடிகர் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்து வரும் கஸ்டடி என்கிற படத்தை தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கிர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார் வெங்கட் பிரபு.
ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சிக்காக 7 விதமான பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடலுக்கு நடனம் வடிவமைத்துள்ளார் சேகர் மாஸ்டர். ஏற்கனவே கிர்த்தி ஷெட்டிக்கு புகழ்பெற்று தந்த புல்லட் பாடல் போல இந்த பாடலும் அவரது திரையுலக பயணத்தில் ஹைலைட்டாக அமையும் என்கிறார்கள் படக்குழுவினர்.