கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ரகுவெல் வெல்ச். 1940ம் ஆண்டு பிறந்த இவர் 1964ம் ஆண்டு பொலிஸ் கேர்ள் என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பிகினி உடையில் நடித்து பரபரப்பு கிளப்பினார். அதன் பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
1973ம் ஆண்டு வெளியான 'தி த்ரீ மஸ்கடியர்ஸ்' என்ற படத்தின் மூலம் உலக புகழ் பெற்றார். 1966ம் ஆண்டு இவரின் பிகினி படம் ஒன்று (அருகில் உள்ள படம்) உலக புகழ் பெற்றது. அப்போதிருந்த எல்லா பத்திரிகைகளும் இந்த படத்தை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள சலூன் கடைகளையும் அலங்கரித்த படம் இது. அதன்பிறகு ஆண்டு தோறும் பிகினி போட்டோ ஷூட் நடத்தி படங்களை வெளியிடுவார். இதனால் பாலிவுட்டில் இவரை பிகினி நடிகை என்றே குறிப்பிடுவார்கள்.
82 வயதான ரகுவெல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்சில் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானார். அவருக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.