'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் | மீண்டும் தமிழுக்கு வரும் சமந்தா | சித்தார்த் - அதிதி ராவ் ரகசிய திருமணம்? | சத்யா ரீமேக்கில் அசோக் செல்வன்? | முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த சூரி | ஆடுஜீவிதம் பார்த்து பிரமித்து பாராட்டிய கமல் - மணிரத்னம் | ஏப்ரலில் வெளியாகும் ‛அரண்மனை 4' |
எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கி உள்ள புதிய படம் ராங்கி. இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி இருக்கிறார். ஆக்சன் கதையில் உருவாக்கி உள்ள இதில் திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கு வருவதற்கு தயாராகி விட்ட ராங்கி படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது, டிசம்பர் 30ம் தேதி அப்படத்தை தியட்டரில் வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் ஒரு வீடியோ மூலம் அறிவித்து இருக்கிறது. அந்த வீடியோவில் திரிஷா நடித்துள்ள ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருப்பது ராங்கி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இதேபோல், விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படமும் டிசம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், யோகி பாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கி இருக்கிறார். ஆக்சன் திரில்லர் கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது.