‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
இந்த ஆண்டில் மட்டும் நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என மூன்று படங்கள் வெளியாகிவிட்டன. இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக ராஜுமுருகன் டைரக்ஷனில் ஜப்பான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 25வது படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சனல் அமன் என்பவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார் சனல் அமன். இவர் இதற்கு முன்னதாக மலையாளத்தில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பஹத் பாசில் நடித்த மாலிக் திரைப்படத்தில் அவரது நண்பரின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியுடன் நடிப்பது குறித்து சனல் அமன் கூறும்போது, “கார்த்தியின் 25-வது படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் நுழைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அருமையான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்ந்தெடுத்த இயக்குனர் ராஜூ முருகனுக்கு நன்றி.. இது உண்மையிலேயே எனக்கு கனவு நனவான தருணம் போலவே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.