கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் |
எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கி உள்ள புதிய படம் ராங்கி. இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி இருக்கிறார். ஆக்சன் கதையில் உருவாக்கி உள்ள இதில் திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கு வருவதற்கு தயாராகி விட்ட ராங்கி படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது, டிசம்பர் 30ம் தேதி அப்படத்தை தியட்டரில் வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் ஒரு வீடியோ மூலம் அறிவித்து இருக்கிறது. அந்த வீடியோவில் திரிஷா நடித்துள்ள ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருப்பது ராங்கி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இதேபோல், விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படமும் டிசம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், யோகி பாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கி இருக்கிறார். ஆக்சன் திரில்லர் கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது.