'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
ஆந்திர மாநிலம் நெல்லூரில் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர் பி.புல்லையா. கல்லூரியில் படிக்கும்போது நாடகத்தில் நடித்த இவர் பாடுவதிலும் திறமையானவர். இன்றைக்கு சுயாதீன ஆல்பங்கள் வெளிவருவது போன்று அன்றைக்கு தானே பாடி அதனை தனி இசை தட்டுகளாக வெளியிட்டவர். மலேசியா சென்று சினிமா கற்ற இவர் பின்னர் மும்பை திரும்பி தாதா சகேப் பால்கே, சாந்தாராம் ஆகியோருடன் பணியாற்றினார்.
பின்னர் அவர் ஹிந்தியில் 'தர்மபத்தினி' என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் ஆந்திராவை சேர்ந்த சாந்தகுமாரியை ஹீரோயினாக நடிக்க வைத்தவர். அப்போது சாந்த குமாரி இசை ஆசிரியையாக இருந்தார்.
பின்னர் தெலுங்கு படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்தார் பி.புல்லையா. சாந்தகுமாரி தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். தீவிரமாக காதலித்து வந்த இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
மனைவி சாந்தகுமாரியை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் தயாரித்து, இயக்கிய படம் 'பக்த ஜனா'. 1930கள் மற்றும் 1940 களில், பக்தியை கருவாகக் கொண்ட பல படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டன. அவர்கள் ஆண் மற்றும் பெண் புனிதர்களையும், இந்து சமயத்தின் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் பக்தர்களையும் கொண்டாடியது.
துக்காராம், சாந்த சக்குபாய், பக்த சேத்தா, பக்த கௌரி மற்றும் காரைக்கால் அம்மையார் போன்றவை அவற்றில் முக்கிமானவை. அந்த வரிசையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாண்டுரங்க பக்தயை பற்றிய படம் "பக்த ஜனா".
சி.ஹொன்னப்ப பாகவதர், சித்தூர் வி.நாகையா, கே.சாரங்கபாணி, பி.ஆர்.பந்துலு, டி.வி.குமுதினி, டி.என்.மீனாட்சி, கே.ஆர்.செல்லம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது.
இந்த படத்திற்கு பிறகு சாந்தகுமாரி, வேலைக்காரி மகள், பொன்னி, பெண்ணின் பெருமை, கலைவாணன், விடிவெள்ளி, போலீஸ்காரன் மகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 1972ம் ஆண்டு வெளிவந்த 'வசந்த மாளிகை' படத்தில் சிவாஜியின் தாயாக நடித்தார்.