ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
'எல்லாம் அவன் செயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆர்கே. அதன் பிறகு வைகை எக்ஸ்பிரஸ், என்வழி தனிவழி, புலி வேஷம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தார்.
தற்போது புதிய ஸ்டூடியோ ஒன்றை கட்டியிருக்கும் அவர் அடுத்தபடம் பற்றி கூறியதாவது : விலங்குகளை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணியை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆணவக் கொலை விலங்குகளை கூட விட்டு வைக்கவில்லை.
பணக்கார வீட்டில் ஒரு நாய் இருந்தால் அந்த நாயின் ஆணவக் கொலை எப்படி இருக்கும். அதுதான் இந்த படத்தின் கதை. மனித மனங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பற்றி இந்தப்படத்தில் பேசுகிறோம்.
யோகி பாபு, தம்பி ராமையா, நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கிறது.
வடிவேலுவை என் படத்தில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் கதை சொன்னேன்.. ஆனால் அவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிற முடிவில் அப்போது இருந்தார். இறங்கி வந்தால் சத்தியமாக இருவரும் இணைந்து நடிப்போம். அவரிடம் இந்தப் படத்திற்காக கொடுத்த ஒரு கோடி ரூபாய் இன்னும் அவரிடம் தான் இருக்கிறது. இப்போது இந்த படத்தில் தம்பி ராமையா நடித்திருப்பது கூட வடிவேலுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் தான் என்றார்.