ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான படம் ‛96'. அதன் பிறகு இப்படத்தை 2020ம் ஆண்டில் ‛ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்த பிரேம்குமார், அந்த படத்தில் சர்வானந்த், சமந்தாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' என்ற படத்தை இயக்கினார்.
அடுத்தபடியாக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போகிறார் பிரேம்குமார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கூறும்போது, இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இருவரும் மீண்டும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதையை அவர்கள் இருவரிடத்திலும் சொன்ன போது ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டார்கள். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் பிரேம்குமார்.