பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் |
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஷாலினி பாண்டே. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் சிறிய இடைவெளிக்குப் பிறகு தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது ஷாலினி பாண்டே அளித்த பேட்டி ஒன்றில் அவர் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து அவர் கூறியதாவது, "அப்போது எனக்கு 22 வயது. நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். கேரவனில் நான் உடை மாற்றிக் கொண்டு இருக்கும்போது, அந்த படத்தின் இயக்குநர் கேரவன் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்து விட்டார். அதிர்ச்சியடைந்த நான் கத்தி திட்டி, இயக்குநரை அனுப்பிவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள், இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றார்கள். அப்போது எனக்கு இந்த பிரச்னையை எப்படி கையாள வேண்டும் எனத் தெரியவில்லை என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இயக்குனரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.