மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பெரும்பாலும் திரையுலகில் பல நட்சத்திரங்கள் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டாமல் தங்களது நட்பை பாதுகாத்து வருகின்றனர். அவ்வப்போது ஒவ்வொருவர் வீட்டு விசேஷ நிகழ்வுகளில், பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்போது தான், ஓ இவர்களெல்லாம் இப்படி கூட ஜாலியாக பார்ட்டி கொண்டாடுகிறார்களா என்பது தெரியவரும். அப்படி சமீபத்தில் நடிகர் சூர்யா வீட்டில் ஒரு நட்சத்திரப் பார்ட்டி நடந்துள்ளது. அனேகமாக இது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சூர்யா, ஜோதிகா தம்பதியினர் தங்களது நட்பு வட்டாரத்திற்கு கொடுத்த பார்ட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜே ரம்யா சுப்பிரமணியன், நடன இயக்குனர் பிருந்தா உள்ளிட்ட பத்துக்கும் குறையாதோர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு முன்னதாக மவுனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த திரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.