சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா அதிரடியான படங்களை எடுத்து பெயர் வாங்கியதை விட, சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததன் மூலமே சமீபகால ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார், அரசியல் குறித்தும் சினிமா துறையில் உள்ளவர்கள் குறித்தும் மனதில் பட்டதை கூறுகிறேன் என இவர் வெளியிடும் சோசியல் மீடியா பதிவுகள் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதன் மூலம் இவர் கைது செய்யப்படும் அளவிற்கு எல்லாம் நிலைமை சீரியசாக சென்றது. அப்படி ஒரு முறை நடந்த நிகழ்வு ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய டுவிட்டர் பதிவுகள் காரணமாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு என்னை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. ஆனால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்னை போனில் அழைத்து, உன்னை கைது செய்வதற்காக வருகிறார்கள். சட்டப்படி என்பதால் எதுவும் மோசமாக நடந்து கொள்ளாதே என்று கூறினார்,
அதே சமயம் என்னுடைய வழக்கறிஞர்கள் குழுவுடன் இதுபற்றி விவாதித்தபோது என் மீது பதியப்பட்ட வழக்கில் புதிய சட்ட விதிகளின்படி வழக்கு பதிய முடியாது, கைது செய்ய முடியாது என நீதித்துறை கூறியிருந்தது. ஆனால் இது எதையும் அறியாமல் என்னை கைது செய்ய வந்த போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்த போது என்ன செய்வது என்றால் தெரியாமல் குழம்பி நின்றனர். பிறகு என் வீட்டிற்குள் வந்து என்னுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உற்சாகமாக பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றார்கள்” என்று கூறியுள்ளார்.