பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள லைகர் படம் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகிறது. பூரி ஜெகநாத் இயக்கி உள்ளார். அனன்யா பாண்டே , ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் குத்து சண்டை வீரர் மைக் டைசனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் தற்போது படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இருவருமே பல பரபரப்பான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். விஜய் தேவரகொண்டா குறித்து அனன்யா பாண்டே ஒரு கேள்விக்கு, அவர் ராஷ்மிகா மந்தனாவை காதலிப்பது போன்று மறைமுகமாக ஒரு பதில் கொடுத்தார். அதற்கு விஜய் தேவரகொண்டா நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா என கேட்க அதற்கு அனன்யா ஆம் என்றார்.
பின்னர் இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறும்போது, ‛‛ராஷ்மிகா என்னுடைய நல்ல நண்பர். அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அவர் என்னுடைய டார்லிங், அவரை நேசிக்கிறேன்'' என்றார்.
தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த போது விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதல் வதந்திகளில் சிக்கினார்கள். அதன்பிறகு அந்த செய்திகள் அடங்கி இருந்தன. இப்போது மீண்டும் ராஷ்மிகாவை விஜய் தேவரகொண்டா காதலிப்பது போன்று அனன்யா பாண்டே ஒரு செய்தியை கொளுத்தி போட்டுள்ளார்.




