ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா நடித்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியையும், வசூலையும் கொடுத்தது. இந்த படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டார். இதன் மூலம் அவரது ரெட்ஜெயண்ட் நிறுவனம் பல கோடி லாபம் ஈட்டியிருக்கிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று முதல்வரை சந்தித்தார். முதல்வருக்கு மலர்கொத்து வழங்கினார். அவருடன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேந்திரனும் சென்றார். இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் "விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்" என்று கூறியிருக்கிறார்.