''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் சினிமாவின் அஷ்டவதானி என்று அழைக்கப்படுகிறவர் டி.ராஜேந்தர். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் டி.ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது வயிற்று பகுதியில் ஏற்படும் ரத்தகசிவு பிரச்சினைக்காக வெளிநாட்டுக்கு சிகிக்சைக்கு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பே அவரது மகன் சிம்பு அமெரிக்கா சென்று தந்தையின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டார். திட்டமிட்டபடி. நேற்று அவரது அமெரிக்கா புறப்பட்டு சென்றார் டி.ராஜேந்தர். அவருடன் மனைவி உஷா உடன் சென்றார். முன்னதாக அவர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இப்போது நான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டேன் என பல கதைகளை எழுதி விட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி நம்பிக்கை ஊட்டியதை மறக்க முடியாது.
என்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நான் வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன் தான். அவன் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நான் ஒப்புக்கொண்டேன். அவனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய், தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான். என் மகனை நான் மன்மதனாக மட்டும் வளர்க்கவில்லை. மரியாதை தெரிந்தவனாகவும் வளர்த்துள்ளேன். சிம்பு படத்தில் வல்லவன் நிஜத்தில் நல்லவன். பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் என் மகன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பு செய்து வருகிறார். இப்படி ஒரு மகனை பெற்றதற்கும், குருவாக இருந்து ஒரு நல்ல சிஷ்யனை உருவாக்கியதற்கும் நான் பெருமைப்படுகிறேன். பாக்கியமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கமல் நலம் விசாரிப்பு
முன்னதாக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அவரை நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.