‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
ரஜினி, நயன்தாரா, ஜோதிகா நடிப்பில் உருவான சந்திரமுகி படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கினார். அதுவும் வெற்றி பெற்றது. ஆனால் தமிழில் சந்திரமுகி 2ம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அப்போது அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 உருவாகிறது. இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பி.வாசு இயக்குகிறார், வடிவேலுவும் நடிக்கிறார். இது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.
பாகுபலி, ஆர் ஆர் ஆர் பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.