குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் 3வது படம் கள்ளபார்ட். விக்ரம், தமன்னா நடிப்பில் உருவான ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது..
அரவிந்த்சாமி, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெராடி உள்பட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் பி.ராஜபாண்டி கூறியதாவது: படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும். அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம். அந்தக் கால நாடகங்களிலும், திரைப்படங்களிலும் வில்லன் பாத்திரத்தை கள்ளபார்ட் என்றே குறிப்பிடுவார்கள்.
ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின் திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதை. படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.அந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம் மே மாதம் வெளியாக உள்ளது என்றார்.