ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா |

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லஷ்மி, சுவாசிகா ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளியான படம் 'மாமன்' . இந்த படத்தின் வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சூரி பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து பேசியதாவது, "மாமன் படம் வெற்றியடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்”. என சூரி வேதனைப்பட்டு பேசினார்.