கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
தமிழ் சினிமாவில் பல படங்களின் வெற்றிக்கு கதை, அதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் எவ்வளவு முக்கியமான காரணமோ அது போல பாடல்கள், காமெடிக் காட்சிகளும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளன. சூப்பர் ஹிட் பாடல்களால் ஓடிய படங்கள், விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காமெடிக் காட்சிகளால் ஓடிய படங்கள் என நிறைய படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் 'டாப்' ஆக இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் சேர்த்து மற்ற சில நகைச்சுவை நடிகர்களும் ரசிகர்களைப் பஞ்சமில்லாமல் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், இன்று தமிழ் சினிமாவில் காமெடிப் படங்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் படங்கள் கூட நம்மை எந்தவிதத்திலும் சிரிக்க வைப்பதில்லை. அவற்றையெல்லாம் எப்படி நகைச்சுவை என்று சொல்லி எடுத்தார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்யும் அளவிற்குத்தான் பல படங்களின் காட்சிகள் உள்ளன.
தமிழ் சினிமாவில் இதுவரை நடக்காத ஒன்றாக இன்று நடந்தது. தமிழ் சினிமாவின் சமீபத்திய வருடங்களில் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர்களான சந்தானம், சூரி, யோகிபாபு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த படங்கள் இன்று வெளியாகின. பேய், சென்டிமென்ட், த்ரில்லர் படங்களாக அவை வெளிவந்திருந்தாலும் நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள் கதாநாயகர்ளாக நடித்தால் அந்தப் படங்களில் குறிப்பிடும்படியான நகைச்சுவைக் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவற்றில் ஓரிரு காட்சிகளைத் தவிர சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியுள்ளன.
இவர்களுக்கு முன்பாக கடந்த மாதம் வடிவேலு நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்த 'கேங்கர்ஸ்' படம் வெளிவந்தது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள அந்தப் படம் வெளிவந்த போதும், இப்போதும் 'எங்கே நகைச்சுவை' என்ற ரசிகர்களின் கமெண்ட்டுகளை மீண்டும் வரவழைத்துள்ளது.
யு டியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள், ரீல்ஸ் வீடியோக்களில் காமெடி செய்து பதிவிடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கணவன் - மனைவியாக, காதலர்களாக, குடும்பத்தினர்களாக, நண்பர்களாக பலர் பதிவிடும் நகைச்சுவைக் காட்சிகள் கூட இப்போது சிறப்பான காமெடியாக அமைந்து மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளித் தருகிறது. அவற்றோடு ஒப்பிடும் போது சினிமாவில் நகைச்சுவையில் கோலோச்சிய சிலர் நடிக்கும் படங்களில் இருக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பை வரவழைப்பதற்குப் பதிலாக எரிச்சலையே வரவைக்கின்றது.
காமெடிக் காட்சிகளை எழுதத் தெரிந்த, சிரிப்பை வரவைக்கும்படியான ரைட்டர்கள் இல்லாமல் போய்விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கென்றும் காமெடியை எழுதுவதற்கென தனி டீம் உள்ளது. அந்த டீமில் உள்ளவர்கள் அப்டேட் ஆகாமல் இருக்கிறார்களா அல்லது நடிகரே அப்டேட் ஆகாமல் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
காப்பியடித்தாலும் பரவாயில்லை, ஷார்ட்ஸ், ரீல்ஸ் ஆகியவற்றிலிருந்து காமெடி காட்சிகளை வாங்கி ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வையுங்கள் காமெடி நடிகர்களே.…