Advertisement

சிறப்புச்செய்திகள்

கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல்ராஜா

14 ஜன, 2026 - 12:57 IST
எழுத்தின் அளவு:
I-am-the-only-producer-in-Tamil-cinema-who-has-no-debt-Gnanavelraja
Advertisement


ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம் 'வா வாத்தியார்', கார்த்தி, ஷில்பா மஞ்சுநாத், சத்யராஜ் நடித்துள்ள இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். தயாரிப்பாருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட படம் நாளை வெளியாகிறது.

இதை முன்னிட்டு நடந்த படத்தின் அறிமுக விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது: நான் தயாரித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகட்டிவிட்டியாக, நிறைய செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது, இவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான்.

நான் நன்றாகத்தான் இருக்கிறேன். அய்யோ பாவம் அவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்று யாரும் தேவையில்லாத அனுதாபத்தை கொடுக்காதீர்கள். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள். ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நன்றி.

கேவிஎன் அண்ணா (ஜனநாயகன் தயாரிப்பாளர்), அவர்களின் 'ஜனநாயகன்' படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது, விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு அவர் பெரிய துணையாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள். பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர்பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ... 'திரெளபதி 2' படத்துக்காக எடை கூடினேன்: ரக்ஷனா இந்துசூடன் 'திரெளபதி 2' படத்துக்காக எடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
14 ஜன, 2026 - 06:01 Report Abuse
தியாகு அதெல்லாம் இருக்கட்டும், உங்க சொந்தக்காரர்கள் சூர்யா, கார்த்தி, ஈமு கோழி சத்தியராஜ் இவர்கள் மூவரும் கடந்த அதிமுக ஆட்சியில் யாரவது தும்மினால் கூட ஆட்சியாளர்களை எதிர்த்து கூவு கூவுன்னு கூவி தினமும் ஒரு கண்டன அறிக்கை விட்டுட்டு இருந்தானுங்களே, இப்ப கட்டுமர திருட்டு திமுக ஆட்சியில் இவ்வளவு கொலைகள், கற்பழிப்புகள், அடிதடிகள், போதை பொருட்கள் நடமாட்டம், ஊழல்கள், லஞ்சங்கள், இந்து மத எதிர்ப்பு, ரௌடிசம், கட்ட பஞ்சாயத்து, போராட்டங்கள் என்று தினமும் ஆட்சி சந்தி சிரிக்குதே. ஆனால் மூன்று கூத்தாடிகளுக்கும் வாயில் பிளாஸ்திரி ஒட்டின மாதிரி எதுக்குமே வாயை திறக்கமாட்டேங்கிறானுங்களே, அதை பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கதான் அவனுங்களுக்கு சொந்தக்காரனாயிற்றே, மௌனம் காக்கும் காரணத்தை அவனுங்களிடம் கேட்டு சொல்லுங்களேன், நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap