ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சவுபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் 'கூலி'. இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வெளிவந்ததும், படம் 'ஏ' சான்றிதழ் பெற்ற ஒரு படம் என்பதால் குடும்பத்துடன் ரசிகர்கள் பார்க்க முடியாததாலும் படத்தின் வசூல் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் அமையவில்லை.
படம் வெளியான நான்கு நாட்களில் 404 கோடி வசூலித்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதன்பிறகு வசூல் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் வெளியடவில்லை. கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரு சில தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் நாளையுடன் தியேட்டர் ஓட்டத்தை முடிவு செய்ய உள்ளது. மற்ற நடிகர்களின் படங்களுடன் வசூல் ரீதியாக சண்டை போட வசதியாக இப்படத்தின் 'பைனல்' வசூல் என்ன என்பதை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுமா என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இருந்தாலும் அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இப்படம் 600 கோடி வசூலைக் கடந்ததாகச் சொல்லப்படுகிறது.