பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் | முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123' | தீவிர மருத்துவ சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா : உடல்நிலையில் முன்னேற்றம் என மகள் தகவல் | ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் |

நடிகர் அஜித்குமார் ஒருபக்கம் நடிப்பு மற்றும் மறுபக்கம் கார் ரேஸ் என பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'குட் பேட் அக்லி' படம் அஜித்தின் சினிமா கேரியரில் அதிக வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. படத்தில் நடித்து முடித்ததும் தொடர்ந்து கார் ரேஸில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அஜித் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கார் ரேஸ் மற்றும் தனது அடுத்தப்படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கார் ரேஸ் போட்டிகளுக்காக கடந்த 2024ல் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை 42 கிலோ எடையை குறைத்துள்ளேன். இதுவரை நான் கார் ரேஸ் மற்றும் திரைப்படம் என மாறி மாறி கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் பல ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இனி ஒரு நல்ல முடிவை எடுக்க உள்ளேன்.
ரேஸ் இருக்கும் நேரங்களில் சினிமாவில் நடிப்பதில்லை என்றும், சினிமாவில் நடிக்கும் போது ரேஸில் கலந்து கொள்வதில்லை என்றும் முடிவெடுக்கிறேன். அதாவது, கார் ரேஸ் காலகட்டத்தில் படம் நடிக்காமல் ரேஸில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி. வரும் நவம்பர் மாதத்தில் எனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன்; அந்த படம் அடுத்தாண்டு (2026) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம். இவ்வாறு அஜித் கூறியுள்ளார்.




