ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருட காலத்தில் வெறும் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனர்களின் முதல் வரிசையில் இடம் பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். இந்த ஐந்து படங்களில் இரண்டு முறை விஜய், அடுத்து கமல் என முன்னேறி தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தை இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததன் பின்னணியில் லோகேஷ் கனகராஜ் விதித்த நிபந்தனையும் இருந்தது என்கிற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
அதாவது இதற்கு முன்பு வெளியான லோகேஷின் கைதி மற்றும் லியோ உள்ளிட்ட படங்களுக்கு ரிலீஸ் தேதி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதற்கேற்றவாறு படப்பிடிப்பு நடத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் திட்டமிட்டபடி சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த தாமதம் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதியை மனதில் கொண்டு கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக வேலைகளை முடிக்க வேண்டிய நிர்பந்தம் லோகேஷ் கனகராஜுக்கு ஏற்பட்டது. குறிப்பாக லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திய இருக்கலாம் என்று கூட படம் வெளியான பிறகு விமர்சனங்கள் இருந்தன.
இந்த நிலையில் கூலி படம் துவங்குவதாக முடிவு செய்யப்பட்டதுமே இதுபோன்று ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டு படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனத்திடம் படம் தயாரான பிறகு நானே சொல்கிறேன் அதன்பிறகு ரிலீஸ் தேதியை அறிவியுங்கள் என்பதை ஒரு நிபந்தனையாகவே கூறிவிட்டேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்பிறகு படம் முடிந்து அதை எடிட்டிங் செய்து பார்த்து திருப்தி வந்த பின்னரே ரிலீஸ் தேதி அறிவிக்க கிரீன் சிக்னல் காட்டினாராம் லோகேஷ் கனகராஜ்.