‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து ஜூலை மாதம் திரைக்கு வருகிற படம் 'கிங்டம்'. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார், கவுதம் தின்னூரி இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படத்திற்கான புரொமோசன் நிகழ்ச்சிக்காக தமிழில் அளித்த பேட்டியில் அனிருத் குறித்து அவர் கூறியதாவது, " அனிருத் மிகவும் திறமையானவர். நான் அவருடைய ரசிகன். அனிருத் பாட்டில் வேற நடிகர்கள் இருந்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். இப்போது அனிருத் பாட்டு எனக்குத்தான் வந்துள்ளது. ஒரு முறை எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப் போயிருந்தேன். அப்போ அந்த மெஷினுக்குள்ள என்ன அனுப்பிட்டாங்க. ஆனா நான் அனிருத் பாட்டு போடுங்கன்னு கேட்டு மெஷினுக்குள்ள வைப் பண்ணிட்டு இருந்தேன். இப்போ நானும் அனியும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்." என தெரிவித்துள்ளார்.