விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் | வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் சைப் அலிகான் |
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் அட்ரஸ். குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய ராஜமோகன் இயக்கியுள்ளார். அதர்வா முரளி, இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தேவதர்ஷினி, மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து ஆகியோர் .தம்பிராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ராஜமோகன் கூறியதாவது: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். ஒவ்வொரு கிராமத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். நமது நாட்டு பிரதமரிலிருந்து, கவுன்சிலர் வரை கிராமங்கள் கணினி மயமாகிறது என கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது திருநெல்வேலி வரை உள்ள கிராமங்கள் மட்டுமே, அதை தாண்டிய இடங்கள் கிராமமாக இவர்களுக்கு தெரியவில்லை.
கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்திற்கு, 2015ல் தான் அட்ரஸ் கிடைத்தது. 1956ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது 'அட்ரஸை' தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
நம் நாட்டில் பல கிராமங்கள் அப்படி உள்ளது. அப்படி ஒரு கிராமத்தில் 8 கிமீ நாங்கள் நடந்து சென்று படபிடிப்பு நடத்தினோம், நடிகர்களும் அவ்வளவு தூரம் நடந்து வந்து நடித்தனர். பெரிய நடிகர்களுக்கு மட்டும், கொடைக்கானல் அருகில் படபிடிப்பு நடத்தினோம். ஒரு கதை படமாக, அந்த கதை முடிவு செய்ய வேண்டும். எனது கதைக்கு உயிர் இருக்கிறது. அது தான் என்னை இங்கு கூட்டி வந்தது என்றார்.