ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
ஆந்திர துணை முதல்வராக இருக்கும் பவன்கல்யாண் பிரபல தெலுங்கு நடிகர் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் நடித்த ஹரிஹர வீரமல்லு என்ற படம், வரும் ஜூன் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கில் மட்டுமல்ல, தமிழ் உட்பட வேறு சில மொழிகளிலும் வெளியாகிறது. இதற்குமுன்பு பவன் கல்யாண் படங்கள் தமிழில் டப் ஆனது இல்லை. அவர் படங்களுக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது இல்லை.
சமீபகாலமாக தமிழக அரசியலில் அதிக ஆர்வம் காண்பிக்கிறார் பவன் கல்யாண். அவ்வப்போது தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு வருகிறார். அந்தவகையில் அவர் நடித்த ஹரிஹர வீரமல்லு படத்தையும் தமிழில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த படத்தை த யாரித்து இருப்பவர் துாள், கில்லி, இந்தியன் போன்ற படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம். கடந்த ஆண்டு அவர் விஜய் நடித்த கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்தார். அந்த படம் மீண்டும் ஹிட்டானது. அவரும் தமிழில் ரிலீஸ் செய்ய விரும்பி இருக்கிறார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். இந்த படத்தில் கீரவாணி இசையில் தெலுங்கில் பவன் கல்யாண் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வால் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.