கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
2012ம் ஆண்டு வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன்பிறகு கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன் உள்பட பல படங்களில் நடித்தார்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. திடீரென அவருக்கு வாய்ப்புகள் நின்று போனது. பிரபு தேவாவுடன் நடித்துள்ள யங் மங் சங் படம் வெளிவரவில்லை. கடைசியாக புலிக்குத்தி பாண்டி படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்திருந்தார். இதுவும் தொலைக்காட்சியில் வெளியானது.
இந்த நிலையில் லட்சுமி மேனன் சத்தமின்றி நடித்துள்ள படம் ஏஜிபி. ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம். இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார் என்றார்.
இப்படியான ஒரு கேரக்டரில்தான் அந்நியன் படத்தில் விக்ரம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.