பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிரேம் குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '96'. அப்படத்தை இயக்கி பிரேம்குமாரின் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த 'மெய்யழகன்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே, '96' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேலைகள் ஆரம்பமாகின.
படத்தின் கதையை விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரிடம் சொல்லி பிரேம் சம்மதம் வாங்கிவிட்டதாகவும் சொன்னார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் என்றும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால், தற்போது அதிலிருந்து விலகும் முடிவை விஜய் சேதுபதி எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
கதைப்படி வயதான தோற்றத்தில் நடிக்க வேண்டி இருக்கிறதாம். இனி, அப்படி நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக விஜய் சேதுபதி தரப்பிலிருந்து காரணம் சொல்லப்பட்டுள்ளதாம். தனக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்த படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து விலகும் முடிவை விஜய் சேதுபதி எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும் மறுபக்கம் சொல்கிறார்கள். ஆனாலும், வெளியில் கசிந்த தகவல் உண்மையா இல்லை பொய்யா என்பது விரைவில் தெரிந்துவிடும்.