விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 96. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கவுரி கிஷன். இந்த படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த இவர், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
அதேப்போன்று நட்பே துணை படத்தில் நடித்தவர் அனகா. தொடர்ந்து சந்தானத்தின் டிக்கிலோனா படத்திலும் நடித்தார். இவர்கள் இருவரும் மகிழினி என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். விஜி.பாலசுப்ரமணியன் இயக்கியுள்ளா இந்த பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார். அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கவுரி கிஷணும், அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனர்.
இயக்குனர் கூறுகையில், ‛எல்.ஜி.பி.டி., என அழைக்கப்படும், ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமூகத்திற்கு புரிதல் வேண்டும் என்பதே இந்த மகிழினியின் நோக்கம்' என்றார். இதற்கு மதன்கார்க்கி பாடல் எழுத, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார்.