குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பாகுபலி படங்கள் மூலம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தவர் ராஜமவுலி. இந்த படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம். ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இப்படம் பாகுபலியை விட பலமடங்கு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் ராஜமவுலியின் அடுத்த ஹீரோ யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் இயக்குவதாக உறுதியான தகவல்கள் கசிந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுவாக ராஜமவுலி படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். நான் ஈ சுதீப், பாகுபலி ராணா என ஹீரோக்களே விரும்பி நடிப்பார்கள். அந்த வரிசையில் விக்ரமும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.