Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓரின சேர்க்கையாளர்களாக நடித்த கவுரி கிஷண், அனகா

24 நவ, 2021 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Gouri-Kishan---Anaga-acted-A-Tamil-Song-on-LGBT

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 96. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கவுரி கிஷன். இந்த படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த இவர், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அதேப்போன்று நட்பே துணை படத்தில் நடித்தவர் அனகா. தொடர்ந்து சந்தானத்தின் டிக்கிலோனா படத்திலும் நடித்தார். இவர்கள் இருவரும் மகிழினி என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். விஜி.பாலசுப்ரமணியன் இயக்கியுள்ளா இந்த பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார். அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கவுரி கிஷணும், அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனர்.

இயக்குனர் கூறுகையில், ‛எல்.ஜி.பி.டி., என அழைக்கப்படும், ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமூகத்திற்கு புரிதல் வேண்டும் என்பதே இந்த மகிழினியின் நோக்கம்' என்றார். இதற்கு மதன்கார்க்கி பாடல் எழுத, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெப் தொடரில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்வெப் தொடரில் நாகசைதன்யாவுக்கு ... மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம்? மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
25 நவ, 2021 - 14:46 Report Abuse
Bala Murugan கருமண்டா பெண்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக நடிச்சிருக்காங்களாம். நடிச்சாங்கன்னா வாழ்ந்திருக்காங்கனு சொல்வாங்க. வாழறவுங்கள நடிச்சிருக்காங்கனு சொல்வாங்க, ஆண் பெண் காதலைதான் கேவலமாக காட்டுகிறார்கள் என்று பார்த்தால் தமிழ் திரையுலகமே வேண்டாம் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கு. கேடு கெட்ட திரையுலகம். திரைப்படத்துறை ஒழியட்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in