நடிகர் சங்க புதுகட்டடம் : விஜயகாந்த் பெயர் சூட்டப்படுமா | தள்ளிப் போகிறதா துல்கர் சல்மானின் 'காந்தா' ? | சிறிய படங்களுடன் விநாயக சதுர்த்தி ரிலீஸ் | ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் ? | 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பிஜூ மேனன் | 'பிக் பாஸ்' ஹிந்தி, சீசன் 19 ஆரம்பம் | அண்ணன் அண்ணன் தான் : விஜய் குறித்து சிவகார்த்திகேயன் | ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! |
தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் ஜிஎஸ்டி, உள்ளாட்சி கேளிக்கை வரி, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் ஆகியவற்றுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூபாய் 200 வரை ஒரு டிக்கெட்டுக்குக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
12 சதவீத ஜிஎஸ்டி வரி, 8 சதவீத உள்ளாட்சி கேளிக்கை வரி, 4 ரூபாய் தியேட்டர் பராமரிப்பு கட்டணம் ஆகியவை சராசரியாக ஒரு டிக்கெட் கட்டணத்தில் இடம் பெறுகிறது.
உள்ளாட்சி கேளிக்கை வரியை மாநில அரசு குறைக்க வேண்டுமெனவும், முழுமையாக நீக்க வேண்டுமெனவும் திரையுலகத்தினர் சார்பில் அடிக்கடி கேட்கப்பட்டு வந்தது. ஆனால், முழுமையாகக் குறைக்காமல் 8 சதவீத வரியை பாதியாகக் குறைத்து 4 சதவீதமாக வசூலிக்கலாமா என அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல் தியேட்டர்களில் திரைப்படங்களை மட்டுமே இதுவரை திரையிட அனுமதி உள்ளது. வரும் காலங்களில் பிரிமியர் லீக் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள், வேறு முக்கிய நேரடி நிகழ்வுகளையும் திரையிட அனுமதி அளிக்கவும் பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வரலாம் எனச் சொல்கிறார்கள்.