ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியீடு அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் 'ஜனநாயகன்' படம் 2026 பொங்கலை முன்னிட்டு வெளிவரும் என பத்து நாட்களுக்கு முன்னதாக அறிவித்தார்கள்.
அதற்கடுத்து மற்றுமொரு முக்கிய அறிவிப்பாக ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்று நேற்று மாலை அறிவித்தார்கள். அதற்கு முன்னதாக நேற்று மதியம் தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.
'இட்லி கடை' படம் வரும் வாரம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ஒரு படம். ஆனால், அக்டோபரில் தள்ளி வைக்கப்பட்ட படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டதற்குக் காரணம் 'கூலி' படத்தின் வெளியீட்டு அறிவிப்புதான் என்கிறார்கள்.