ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம். சூர்யா முக்கியத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை(நவ., 2) ஓடிடியில் வெளியாகிறது.
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவது தான் சிறந்ததொரு கலைப்படைப்பு. நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞராக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப் படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் ஏராளம் என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப் பூர்வமான பாராட்டு ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவர் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.




