தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தெலுங்கு சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவரான சாய் தரம் தேஜ் நடித்துள்ள ரிபப்ளிக் என்கிற படம் நேற்று ரிலீசாகி இருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்பாக சாய் தரம் தேஜ் மோட்டார் பைக்கில் அதிவேகமாக சென்றபோது விபத்துக்கு உள்ளானார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அவரது படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதற்காக சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
அந்த விதமாக நடிகர் அல்லு அர்ஜுன் ரிபப்ளிக் படத்தை புரமோட் பண்ணும் விதமாக தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். ஆனால் அதுதான் இப்பொழுது ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி அல்லு அர்ஜுனுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. அந்த டுவீட்டில், "துரதிர்ஷ்டவசமாக எனது சகோதரர் சாய் தரம் தேஜ் இதை பார்ப்பதற்கு இங்கே இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு அவர் இவ்வாறு கூறியிருந்தாலும் பொதுவாக ஒருவர் உயிரோடு இல்லாதபோது தான் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள், அதனால் அல்லு அர்ஜுன் எப்படி இந்த வார்த்தைகளை கூறலாம் என்று சாய் தரம் தேஜின் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை விமர்சித்து வருகிறார்கள்.